கடந்த 1ம் தேதி முதல் அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 84,768 பேர் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வானிலை சீரடைந்தபின் யாத்திரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.