தண்ணீர் தேடி வந்த புள்ளி மான்கள் ரயில் அடிபட்டு பலி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிருங்காக்கோட்டை அருகே இன்று காலை ரயிலில் அடிபட்டு இரு புள்ளி மான்கள் உயிரிழந்தன.

மானாமதுரை அருகே பல கிராமங்களில் காட்டுப் பகுதிகளில் புள்ளி மான்கள் வசித்து வருகின்றன. இவை இரை, தண்ணீர் தேடி அவ்வப்போது நகர் பகுதியில் உள்ள சாலை மற்றும் ரயில் பாதை பகுதிகளை கடப்பது வழக்கம்.

இந்நிலையில் மானாமதுரை அருகே கிருங்காக்கோட்டை என்ற இடத்தில் கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் இரு புள்ளி மான்கள் மோதி உயிரிழந்து கிடந்தன. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்து கிடந்த இரு மான்களின் உடலை கைப்பற்றி அங்கேயே பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

தண்ணிர் தேடி வரும்போது இந்த மான்கள் சிக்கி உயிரிழப்பது தொடர் கதை ஆகி வருகிறது என்றும் காட்டுப்பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் கண்மாய் பகுதியில் அதிக அளவு மான்கள் இருப்பதால் தண்ணீர் தேடி வருவதாகவும் வனத்துறை சார்பில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் வைத்து மான்களை பாதுகாக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News