பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி அடிக்கடி பரபரப்பான கருத்துக்களே வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பிரதமர் மோடி குறித்தும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்தும் அவர் பேசியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியசாமி பிரதமர் மோடி ஊர் சுற்றுவதில் தான் அக்கறை காட்டுகிறார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என குற்றம் சாட்டினார்.
கர்நாடக தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி செல்வாக்கு குறைந்து விட்டது என கூறினார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சுப்ரமணியசாமி அண்ணாமலை யார்? தமிழகத்தில் பாஜக இருக்கிறதா? நான் எங்கேயும் பாஜகவை பார்க்கவில்லை. பாஜகவை பார்க்காத போது அவர் எப்படி பார்க்க முடியும் என பேசியுள்ளார்.