நாடு முழுவதும் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வரத்து குறைவு மற்றும் மழை காரணமாக விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ தக்காளி 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் தக்காளி வாங்கவே யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.