மதுபானங்கள் மீதான கலால் வரியை உயர்வு குறித்து கர்நாடகா மாநில பட்ஜெட்டில் இன்று அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இதனால் மதுபானங்களின் விலை உயரும் என தெரிகிறது.
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா 2023-24ஆம் நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபான வகைகளுக்கு (IMFL) 18 பிரிவுகளிலும் 20 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதேபோல் பீர் வகைகளுக்கு 175 சதவீதம் முதல் 185 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய மதுபான வகைகளின் விலை உயர்கிறது. இந்த செய்தி குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.