Connect with us

Raj News Tamil

மேட்டூர் அணையில் இருந்து திரக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகம்

மேட்டூர் அணையில் இருந்து திரக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திரக்கப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் சிக்கிக் கொண்ட 3 பேரை, தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து தொடர் கனமழை காரணமாக, கர்நாடகாவில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு, ஒரு லட்சத்து 95 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணைக்கும் சீராக தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சத்து 95 ஆயிரம் கன அடியில் இருந்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே முழுமையாக காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரம் உள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் சுற்றுவட்டாரத்தில் 4-வது நாளாக கனமழை பெய்து வருகிறது.

மேலும் மேட்டூர் அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானியில், காவிரியின் இருபுறமும் கரைகளை தொட்டவாறு, தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

கந்தன் பட்டறை, பசுவேஸ்வரர் வீதி, பழைய பாலம், கீரைக்காரர் வீதி, நேதாஜி நகர், மார்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகளில், 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஆற்றில் இருந்து விணாடிக்கு 2 லட்சத்து 3 ஆயிரத்து 937 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கொள்ளிடம் ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல், கோரைதிட்டு உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் ஆய்வு செய்தார்.


இட்க்ஹனிடையே அரியலூர் மாவட்டம் அணைக்குடி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை, ராஜூ மற்றும் ஆறுமுகம் என்ற சிறுவன் ஆடு மேய்க்கச் சென்றபோது, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வந்ததால், சிக்கிக் கொண்டனர்.

ஆற்றின் நடுவே மேடான பகுதியில், 370 ஆடுகளுடன் அவர்கள் தவித்தனர்.

தீயணைப்பு படையை சேர்ந்த வீரர்கள், ரப்பர் படகு மூலம் சென்று, ஆற்றின் நடுவே சிக்கியிருந்த 3 பேரையும், பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர்.

ஆனால், அவர்களது ஆடுகள் மீட்கப்படவில்லை

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top