தக்காளி விலை பல மடங்கு உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெண் ஒருவர் தனது விவசாய பண்ணையில் இருந்து 60 மூட்டை தக்காளியை திருடி உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். திருடப்பட்ட தக்காளிகளின் மதிப்பு தற்போதைய விலையின்படி சுமார் 2.5 லட்சம் ரூபாய் ஆகும்.
அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ஹளேபீடு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.