திருமணம் செய்ய சொல்லி ஆறு வருடமாக தொந்தரவு செய்யும் வாலிபன் மீது நடிகை நித்யா மேனன் பரபரப்பு குற்றசாட்டு…
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நித்யா மேனன்.இவர் “அதே நேரம் அதே இடம் என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார்.
இதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மெர்சல்,சைக்கோ மற்றும் தற்போது திரைக்கு வரவுள்ள நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் திருமணம் என பரவிய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும்,மேலும் கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் வர்க்கி தன்னை காதலிப்பதாக வெளிவரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் உண்மைக்கு புறம்பானவை எனக் கூறினார்.
இவர் கடந்த 6 வருடமாக திருமணம் செய்ய சொல்லி தொந்தரவு கொடுத்து வருகிறார் என்றும் இதுவரை அவரிடமிருந்து எனக்கு வந்த 30 தொலைபேசி எண்களை முடக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்படி இருந்தும் என்னை தொடர்ந்து விடாமல் பல்வேறு புதிய எண்களிலிருந்து எனக்கு போன் செய்து திருமணம் செய்ய சொல்லி தொல்லை கொடுத்து வருகிறார்.
என்னை தொல்லை செய்வது மட்டுமில்லமல் என் அப்பா, அம்மாவிற்கும் போன் செய்து தொல்லை கொடுத்து வருகிறார் என குற்ற சாட்டினார்.
இதுகுறித்து போலீசில் பலரும் புகார் கொடுக்கச் சொன்னார்கள் நான் தான் அவர் ஏதோ அறியாமையாலும், எதாவது பிரச்சனை இருக்கும் என மன்னித்து விட்டுவிட்டேன்.
இச்செய்தி நித்யாவின் ரசிகர்கள் மத்தியிலும், மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைவுலகில் ரசிகர்கள் நடிகைகளை காதலிப்பதாக பொழுதுபோக்கிற்காக பேசுவது சாகஜம் ஆனால் இவர் ஒருபடி மேல் சென்று திருமணம் செய்ய சொல்லி தொல்லை செய்திருப்பது அவரின் திடமான நம்பிக்கையை வெளிகாட்டுகிறது.