பொது சிவில் சட்டத்திற்கு பாஜகவின் கூட்டணி கட்சி எதிர்ப்பு

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

எதிர் கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து தற்போது பாஜகவின் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் ஒன்றான தேசிய மக்களின் கட்சி பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வளர்ச்சி திட்டங்களில் தேசிய மக்களின் கட்சி, பா.ஜனதாவுடன் கூட்டணியாக செயல்பாட்டாலும், எங்களின் சொந்த சித்தாந்தத்தை நாங்கள் பின்பற்றுகிறோம் என அக்கட்சியின் மாநில செயல் தலைவர் லிகா சாயா தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News