நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.
குறிப்பாக வரும் 2025 ஆம் ஆண்டு மக்கள் இயக்கம் ,களப்பணிகளில் அதீத கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.விஜய் வருகிற சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 2026-ம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவவும் தெரியவருகிறது.
சமீபகாலமாக ,விஜய் தன் இயக்கத்தின் மூலம் பல வித நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன்படி , விஜய் மக்கள் இயக்கத்தினர், வருகிற காமராஜர் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளதாகவும்.அதுகுறித்து , பனையூர் மாவட்ட பொறுப்பாளருடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார் என்றும் தகவல் கசிந்துள்ளது.