நடுவழியில் நின்ற ரயிலை தள்ளிச் செல்லும் பயணிகள்…விளக்கம் கொடுத்த ரயில்வே நிர்வாகம்

பழுதான ரயில் ஒன்றை ராணுவ வீரர்கள், ரயில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தள்ளுவது போல இணையத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவியது.

இந்த வீடியோ தொடர்பாக தெற்கு மத்திய ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கடந்த 7-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் ஹெளராவில் இருந்து தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்துக்கு சென்று கொண்டிருந்த ஃபலக்னுமா விரைவு ரயில் பொம்மைப்பள்ளி-பகிடிபள்ளி பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதில்,S2 முதல் S6 வரையிலான பெட்டிகளுக்கு தீ பரவியது. மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் இருப்பதற்காக அந்த பெட்டிகள் கழற்றிவிடப்பட்டன. அந்தப் பெட்டிகளை இழுத்துச் செல்வதற்காக எஞ்ஜின் வருவதற்கு காத்திருக்கும் நேரத்தில் தீ பரவ வாய்ப்பிருந்ததால், அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள், ரயில்வே போலீசாருடன் இணைந்து மக்கள் ஒன்றுகூடி ரயிலை தள்ளியதாக விளக்கம் அளித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News