கமல் ஹாசன் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு.
பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகம் தற்போது உருவாக உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தில், கமல், அஜித், சூர்யா ஆகியோர் ஒன்றிணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
அதாவது, வேட்டையாடு விளையாடு ராகவன், காக்க காக்க அன்புச் செல்வன், என்னை அறிந்தால் சத்யதேவ் ஆகிய 3 கதாபாத்திரங்களும், ஒரே படத்தில் வருவதற்கு, கௌதம் மேனன் முயற்சிகள் எடுக்க உள்ளாராம்.
இந்த முயற்சி வெற்றி பெற்றால், தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட படமாக இது இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.