அரசு மருத்துவமனையில் சிகிச்சை: 18 பேர் பார்வை இழப்பு!

ராஜஸ்தானின் அரசு மருத்துவமனையான சவாய் மான் சிங் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு 18 பேர் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் ராஜஸ்தான் அரசாங்கத்தின் சிரஞ்சீவி சுகாதார திட்டத்தின் கீழ் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர்களில் பெரும்பாலோனோர் தங்களது ஒரு கண்ணின் பார்வை இழந்ததாகக் கூறப்படுகிறது. சிலர் தங்களுக்கு கண்களில் கடுமையான வலி இருப்பதாகத் தெரிவித்ததை அடுத்து, மருத்துவமனை அதிகாரிகள் அவர்களை மீண்டும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மீண்டும் மருத்துவமனையில் சேர்ந்த சிலருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்த பிறகும் அவர்களால் இழந்த பார்வையை மீண்டும் பெற முடியவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனையின் கண் மருத்துவப் பிரிவு அதிகாரிகள் தங்கள் தரப்பில் எந்த குறையும் இல்லை என்று கூறியதுடன், நோயாளிகளிடமிருந்து புகார்களைப் பெற்ற பிறகு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

RELATED ARTICLES

Recent News