இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முஸ்லீம் உலக லீக்கின் பொதுச் செயலாளர் அப்துல்கரீம் சந்தித்தார்.

இந்த சந்திப்பு பின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியதாவது: இந்தியா, பல கலாசாரங்கள், பல மொழிகள், பல இனங்கள் மற்றும் பல மதங்களை கொண்ட சமூகமாக இருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு.

நம் நாட்டில் 20 கோடி முஸ்லிம் சகோதர, சகோதரிகள் இருக்கின்றனர். இதன்மூலம் அதிக முஸ்லிம்கள் கொண்ட உலகின் 2வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. சவுதி அரேபியா உடன் இந்தியா நல்லுறவை கொண்டுள்ளது. இரு நாடுகளும் பயங்கரவாதம் எந்த வகையில் வந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சவுதி அரேபியாவுடனான உறவுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இரு நாடுகளும் நீண்ட காலமாக வர்த்தகம் உள்ளிட்டவற்றில் உறவுகளை கொண்டுள்ளன. அவரது இந்தியப் பயணம், முஸ்லிம் உலக லீக் அமைப்புக்கு பயன் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News