விஜய் எடுத்த முடிவு.. லியோ 1000 கோடி கன்ஃபார்ம்!

இதுவரை இல்லாத அளவிற்கு, லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றி பெறும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், விஜயும் இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அதாவது, தனது ஒவ்வொரு படத்திற்கும் இசை வெளியீட்டு விழா நடத்துவதை விஜய் வாடிக்கையாக வைத்துள்ளார்.

இவ்வாறு நடத்தப்படும் விழா, சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் தான் பொதுவாக நடத்தப்படும். ஆனால், இந்த முறை, மலேசியா, துபாய் என்று பல்வேறு நாடுகளுக்கு நேரடியாக சென்று, விஜய் புரமோஷன் செய்ய உள்ளாராம்.

இதன்காரணமாக, இப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடியை அசால்ட்டாக வசூலிக்கும் என்று சினிமா வட்டாரங்களில் நம்பப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News