டெங்கு காய்ச்சல் நாடு முழுவதும் தீயாய் பரவி வருகிறது. கேராளவில் நேற்று ஒரே நாளில் 11,800 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக கேரளாவில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தற்போது அங்கு டெங்கு பரவி வருகிறது.

தினசரி சராசரியாக 800 முதல் 900 புதிய காய்ச்சல் பாதிப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கேரள மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரே நாளில் 11,813 பேர் பல்வேறு காய்ச்சல் பாதிப்புகளால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது பரவி வரும் டெங்குவால் 6 பேர் நேற்று ஒரே நாளில் பலியாகியுள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.