Connect with us

RajNewsTamil

வாய்ப்புக்காக இயக்குனர்களிடம் கெஞ்சும் அதிதி ஷங்கர்..!

சினிமா

வாய்ப்புக்காக இயக்குனர்களிடம் கெஞ்சும் அதிதி ஷங்கர்..!

இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி, கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்நிலையில் நேற்று வெளியான மாவீரன் படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். முறையாக சங்கீதம் பயின்ற இவர் இந்த இரண்டு படங்களிலும் தலா ஒரு பாடலை பாடியிருக்கிறார். இவர் பாடிய இரண்டு பாடல்களுமே செம்ம ஹிட்டாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

சமீபத்தில் நடந்த மாவீரன் ப்ரோமோஷனில் பேசிய அதிதி ஷங்கர், இனிமேல் நடிக்க போகும் படங்களிலும், இயக்குனர்களிடம் கெஞ்சியாவது ஒரு பாடலை பாடிவிடுவேன் என்று கூறுயிருக்கிறார். மேலும் பாட்டு பாடுவது தனது தந்தைக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

More in சினிமா

To Top