தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார் என்று தெரிவித்தார். மேலும், இந்த அறிவிப்பானது, கல்வித்துறைக்கு மட்டுமின்றி, அனைத்து துறைகளுக்கும் பொருத்தமானதாக அமையும் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்தார்.