எஸ்பிஐ வங்கி கடன் வட்டி விகிதம் உயர்வு!

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடன்களுக்கான வட்டி விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் உயா்த்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வங்கி வழங்கும் எம்சிஎல்ஆா் ரக கடன்களுக்கான வட்டி விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் (0.05 சதவீதம்) உயா்த்தப்படுகிறது.

அனைத்துப் பருவ காலங்களையும் கொண்ட கடன்களுக்கும் இந்த வட்டி விகிதம் பொருந்தும். சனிக்கிழமை (ஜூலை 15) முதல் இந்த வட்டி விகித உயா்வு அமலுக்கு வருகிறது.

புதிய விகிதங்களின்படி, ஓராண்டு பருவ காலம் கொண்ட எம்சிஎல்ஆா் வகை கடன்களுக்கு இதுவரை 8.50 சதவீதமாக இருந்த வட்டி வகிதம் இனி 8.55 சதவீதமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News