ட்விட்டர் நிறுவனம் நஷ்டம்: எலான் மஸ்க்!

ட்விட்டருக்கான விளம்பரங்கள் 50 சதவிகிதம் குறைந்ததால் நாங்கள் இன்னும் நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் வியாபாரம் குறித்து ஆலோசனை வழங்குவதாக வெளியான ட்விட் ஒன்றுக்கு பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ட்விட்டருக்கான விளம்பரங்கள் 50 சதவிகிதம் குறைந்ததால் நாங்கள் இன்னும் நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அதேபோல ட்விட்டருக்கு அதிக அளவிலான கடன் சுமை இருக்கிறது. வியாபாரம் சார்ந்த மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக ட்விட்டரை லாபப் பாதைக்கு கொண்டுவர வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News