தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு..!!

நாடு முழுவதும் தக்காளியின் வரத்து குறைந்ததன் காரணமாக தக்காளியின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து டில்லிக்கு சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள தக்காளியை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி, தெலுங்கானா மாநிலம் அதிதிலாபாத் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இதனால் லாரியில் இருந்த தக்காளி சாலையில் சிதறியது.

தக்காளியின் விலை அதிகமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் தக்காளியை அள்ளிச்செல்ல வாய்ப்புகள் ஏற்பட்டன. இதனையடுத்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் தக்காளிக்கு துப்பாக்கிய ஏந்திய போலீசாரை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர்.

தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ள சம்பவத்தை அந்த பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

RELATED ARTICLES

Recent News