வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து பல்வேறு எதிர்க்கட்சிகள் கூறி வந்தது.
அந்த வகையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பெங்களூருவில் நேற்று இரண்டாவது கூட்டம் தொடங்கியது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் தற்போதைய கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி (INDIA) என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.