மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக விசாரணைக்கு, இன்று(ஜூலை 18) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக பிரிஜ் பூஷனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து டில்லி நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷண் மற்றும் அவரது உதவியாளர் வினோத் தோமர் ஆகிய இருவரும் இன்று(ஜூலை 18) நேரில் ஆஜராகினர்.
இந்நிலையில் பாலியல் புகாரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு இடைக்கால ஜாமின் வழங்கி டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது உதவியாளர் வினோத் தோமருக்கும் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது.