இரண்டாவது நாளாக தொடரும் பொன்முடி விசாரணை ! இன்று எவ்வளவு மணி நேரமோ ?

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனான திமுக எம்பி கவுதம சிகாமணி .இவர்கள் இருவரையும் விசாரணை செய்த அமலாக்கத்துறை வீடு உள்ளிட்ட இடங்களில் சுமார் 13 மணி நேர சோதனை நடத்தினர்.

மேலும் ,விசாரணையை தொடர நுங்கப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆகியோரிடம் தனித்தனியே சுமார் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இரவு முழுவதும் தொடர்ந்த விசாரணைக்கு பின் ,அதிகாலை, 3 மணிக்கு மேல் தான் பொன்முடி வெளியில் வந்ததாகதெரியவருகிறது. இன்று மாலை மீண்டும் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில் ,சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி ஆகிய இருவரும் மீண்டும் ஆஜராகியுள்ளனர்இருவரிடமும் தற்போது தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News