ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் ! சுட்டுக்கொண்ட 3 வயது குழந்தை !

அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகானத்தின் பால்புரூக் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு 3 வயது குழந்தை ஒன்று வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிய போது தவறுதலாக வீட்டிலிருந்த ஒரு வயது சகோதரியின் தலைப்பகுதியில் சுட்டு கொன்றுள்ளது.

இதுகுறித்து, அமெரிக்க காவல்துறை கூறுகையில்,”காவல் நிலையத்திற்கு குழந்தை போன் செய்து உள்ளது. அழைப்பிற்கு பதிலளித்து,சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 3 வயது குழந்தை தவறுதலாக 1 வயது சகோதரியின் தலையில் சுட்டுள்ளது துன்று தெரியவந்தது.

இந்நிலையில் ,சுயநினைவின்றி இருந்த குழந்தையை மீட்டு பலோமர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை முன்னதாகவே இறந்துவிட்டது என்று தெரிவித்தனர் என்று காவல்துறை தரப்பில் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும், சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர். இது குறித்த புகைப்படங்களையோ,பெயரையோ குழந்தைகளின் நலன்கருதி தெரிவிக்கப்படவில்லையாம். இதனைத்தொடர்ந்து ,போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News