அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ரோமன் மெக்கோர்மிக் என்ற 15வயது சிறுவன், ப்ரான்கியோ ஓடோரீனல் சிண்ட்ரோம் எனப்படும் மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தான்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து அவனுடைய சிறுநீரகம் செயலிழந்தது. இதனால் ரோமனுக்கு பொருந்துகிற சிறுநீரக நன்கொடையாளரை தேடும் பணியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டனர். இந்நிலையில் சிறுவனின் கணித ஆசிரியர், அவருடைய சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்துள்ளார்.
சில பரிசோதனைகளுக்கு பிறகு, ஆசிரியரின் சிறுநீரகம் ரோமனுக்கு பொருந்தும் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை இன்று நடைபெறவுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.