தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இளைஞர் ஒருவரை உறவினர்கள் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
வலியால் துடித்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்க இரவு பணியில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் தரையில் படுத்து நோயாளி அவதிபட்டுள்ளார்.
மருத்துவமனையில் வீல் சேர் இல்லாததால் உறவினர்களே காயம் அடைந்த இளைஞரை எக்ஸ்ரே எடுக்க தூக்கி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.