ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த டிம் ஷேட்டாக் தனது நாய் பெல்லாவுடன் கடல் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது புயலில் சிக்கி எதிர்பாராத விதமாக அவரது படகு சேதமடைந்ததால் கரைக்கு திரும்பமுடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் நடுக்கடலில் மாட்டிக்கொண்ட டிம், கடல் மீன்களை பச்சையாக சாப்பிட்டும், மழை நீரை குடித்தும் உயிர் வாழ்ந்துள்ளார். அப்போது அவ்வழியே, ஹெலிகாப்டருடன் கூடிய இழுவை படகு டிம்மை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு அவரை காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
பின்னர், காப்பாற்றப்பட்ட இருவருக்கும் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் டிம் மற்றும் அவரது நாய் பெல்லாவும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
டிம்மின் மன உறுதியும், திறமையும் பாராட்டுக்குரியது என கடலில் தனித்து வாழ்தல் தொடர்பான ஆராய்ச்சி வல்லுனரும் பேராசிரியருமான மைக் டிப்டன் கூறியுள்ளார்.