பெங்களூருவில் 2 நாட்களாக நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், தலைவர்களை வரவேற்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஈடுபடுத்தியதற்கு எதிராக சட்டசபையில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 10 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் காதர் உத்தரவிட்டுள்ளார்.