கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றனர்.இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த உடன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்பதும் காங்கிரசின் வாக்குறுதியில் ஒன்றாக இருந்தது என்று தெரியவருகிறது.
எனவே, கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் கிரகலட்சுமி திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது .இதனை முதல் மந்திரி சித்தராமையா இன்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் 1.28 கோடி குடும்பங்கள் பயனடையும். விரைவில் வீடு வீடாக விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.