ஐஜியின் காவல் வாகனம் தீயிடப்பட்டது! மணிப்பூரில் தொடரும் அசம்பாவிதம்!

மணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாலில் உள்ள குவாகீதெல் பகுதியில் போலீஸ் ஐஜி வாகனம் மர்ம கும்பல்களால் தாக்கப்பட்டு தீயிடப்பட்டது. இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, வன்முறை கும்பலை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் காவல் துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது , 2005 பேட்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கபீப், டிடிம் சாலையில் இம்பால் நோக்கி ,தனது பாதுகாப்பு குழுவுடன் சென்றுகொண்டிருந்தார்.அச்சமயத்தில் தாக்குதல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் ஐஜி கபீப் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பித்தார்.மேலும்,காவலர் ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளிவந்தது.

இதனைத்தொடர்ந்து .சம்பவ இடத்தில் இருந்த போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசி, வன்முறை கும்பலை கலைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் அதிகாரியின் வாகனம் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அம்மாநில போலீசார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் எவ்வித இடையூறுகளுக்கும் இடமளிக்காமல் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Recent News