Connect with us

Raj News Tamil

திடீரென ரூட்டை மாற்றிய எஸ்.ஜே.சூர்யா!

சினிமா

திடீரென ரூட்டை மாற்றிய எஸ்.ஜே.சூர்யா!

அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன.

சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது ‘பொம்மை’, ‘மார்க் ஆண்டனி’, ‘ஆர்சி 15’ படங்கள் உள்ளது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எஸ்.ஜே.சூர்யா படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கில்லர்’ என்ற பெயரில் உருவாகவுள்ள இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி அதில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவர் இயக்கத்தில் கடைசியாக 2015-ம் ஆண்டு இசை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top