இந்திய நாடாளுமன்றம் ஆண்டுதோறும் 3 கூட்டத்தொடர்களை கூடுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என அந்த 3 தொடர்களும் நாட்டின் சிறந்த நிர்வாகத்தை உறுதிப்படுத்த உதவுகின்றன.
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 17 அமர்வுகள் இடம்பெறுகிறது.