54-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழா; வெப்-சீரிஸ் விருது அறிமுகம்- மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா்!

நடப்பு ஆண்டுக்கான 54-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பா் 20 முதல் 28- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சிறந்த இணையத் தொடா் விருது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘வரும் 54-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இணையத் தொடருக்கான விருதை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கலைத் தகுதி, கதையின் சிறப்பம்சம், தொழில்நுட்பத் திறன் மற்றும் ஒட்டுமொத்த சமூகத் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய மொழிகளில் முதலில் தயாரிக்கப்பட்டு ‘ஓ.டி.டி.’ தளங்களில் வெளியடப்பட்ட இணையத் தொடருக்கு இந்த விருது வழங்கப்படும்.

இந்தியா பல்வேறு அரிய திறமைகளால் நிரம்பியுள்ளது. முன்னேற்றமே குறிக்கோளாய், பல கோடி கனவுகள் மற்றும் சொல்லப்படாத கதைகளுடன் உலகை வழிநடத்த தயாராக உள்ள புதிய இந்தியாவின் கதையை இயக்குநா்கள் சொல்ல வேண்டும் என நான் நினைக்கிறேன்.

இந்தியாவின் ‘ஓ.டி.டி.’ துறையில் முதலீட்டை வாயப்பை உருவாக்குதல், இந்திய மொழிப் படங்கள், அதன் அரிய திறமைகளை அங்கீகரித்தல் என ‘ஓ.டி.டி.’ துறையின் வளா்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவித்தலை இந்த விருது நோக்கமாகக் கொண்டுள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

RELATED ARTICLES

Recent News