மணிப்பூரில் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி ஒன்று நேற்று இணையத்தில் வைரலானது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியது:
மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த கொடுமை மிகவும் கவலை அளிக்கின்றது. இந்த சம்பவத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் உச்சநீதிமன்றம் தலையிடும்.
கலவர பகுதிகளில் பெண்கள் ஒரு கருவியாக பயன்படுத்துவது அரசியலைப்பு துஷ்பிரயோகத்தின் உச்சம். அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசுகள் மிக குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.