நாடு முழுவதும் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை இந்தியா முழுவதும் அதிகரித்தது. கடந்த சில தினங்களாக காய்கறிகளின் வரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தக்காளியின் வரவும் சற்று அதிகரித்துள்ளது.
தற்போது தக்காளியின் விலை ஒரு கிலோவிற்கு 30 ரூபாய் குறைந்து 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தக்காளி சில்லறை விற்பனை ரூ.100க்கு விற்கப்படும் நிலையில் நாளை முதல் ரூ.70-க்கு விற்க வேண்டும் என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.