மணிப்பூர் சம்பவம் குறித்து மனம் திறந்த நரேந்திர மோடி !

புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது.இந்நிலையில் ,பிரதமர் மோடி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.மக்களுக்கு உபயோகமுள்ள மசோதாக்கள் நிறைவேற்ற நல்லதொரு கலந்துரையாடல் இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயராக உள்ளது .மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம்,இச்சம்பவமானது பெரும் வேதனையை கொடுத்துள்ளது, எனது இதயம் கனத்துள்ளது. இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே அவமானம் என்றும் குற்றறவாளிகள் தப்ப முடியாது” என்று பேசினார்.

RELATED ARTICLES

Recent News