மகளிர் உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் நார்வேயை வீழ்த்தியது நியூசிலாந்து!

ஹன்னா வில்கின்சன் இரண்டாவது பாதியில் அடித்த கோல் மூலம் நியூசிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியனான நார்வேயை ஈடன் பார்க் மைதானத்தில் வென்று அசத்தியது.

பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள நியூஸிலாந்து, 1995-ம் ஆண்டு சாம்பியனான நார்வே அணியை எதிர்கொண்டது.

இதில் நியூஸிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் ஹன்னா வில்கின்சன் 48-வது நிமிடத்தில் கோல் அடித்தார். உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் நியூஸிலாந்து அணியின் முதல் வெற்றியாக இது அமைந்தது.

இதற்கு முன்னர் 5 முறை உலகக் கோப்பை தொடரில் விளையாடிய நியூஸிலாந்து அணி 15 ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றியை பெற்றது இல்லை.

RELATED ARTICLES

Recent News