இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு (72) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து மறுநாள் வீடு திரும்பினார்.
அவருக்கு இதய கண்காணிப்பு கருவியும் பொருத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை அந்த கருவி எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் ஒலித்தது. இதனால், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சைக்காக நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தும் சிகிச்சை நடந்தது என தகவல் தெரிவிக்கின்றது.