கோவை, தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம், நெல்லை உள்பட தமிழகத்தில் 9 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் 13 பேரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சி தலைவர் முபாரக் வீடு உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மேற்பட்ட இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ போன்ற அமைப்புக்களின் நிர்வாகிகளின் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.