இந்திய பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது: மத்திய அமைச்சர்!

நாடு முழுவதும் ரோஜ்கர் மேளா என்ற பெயரில் வேலை வாய்ப்பு முகாம்கள் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக சென்னை எம்.ஆர்.சி.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 145 பேருக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:

இளைஞர்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே பிரதமர் மோடி தலைமையிலான அரசின் இலக்காகும். அதன்படி இளைஞர்களுக்கு தற்போது வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு உலகளவில் இந்திய பொருளாதாரம் 10-ஆவது இடத்தில் இருந்தது. தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்றார்.

RELATED ARTICLES

Recent News