இந்த ஆண்டு மட்டும் சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பட்டியலை பார்த்தால், அதில் பாஜக-வை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவதூறுகளை பரப்பி, அதன் மூலமாக நாட்டில் சட்டம், ஒழுங்கை கெடுப்பது, மதவாதத்தை தூண்டுவது போன்ற செயல்களை செய்யும் சமூக விரோதிகள் முதலமைச்சரின் நடவடிக்கையால் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள்.
பாஜகவை பொறுத்தவரையில், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என அவர் கூறினார்.