மாஸ்டர் படத்திற்கு பிறகு, தளபதி விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் லியோ.
த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு, அனிருத் தான் இசையமைத்துள்ளார்.
வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ள இந்த திரைப்படம், தனியாக வந்து, அனைத்து இடங்களிலும் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது பிரபல மாஸ் நடிகரின் திரைப்படம், லியோவுக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளதாம். அதாவது, என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா நடித்து வரும் பகவந்த் கேசரி என்ற திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
தெலுங்கு சினிமாவில் இவர் ஒரு மாஸ் ஹீரோவாக இருப்பதால், அங்கு செம ஓபனிங் இருக்கும். இதன்காரணமாக, லியோ படத்தின் வசூல், தெலுங்கில் அடிப்பட வாய்ப்பு உள்ளது.