அதிக டி.ஆர்.பி ரேட்டிங்கை கொண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்-பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இதே போன்று, தெலுங்கிலும் தொடங்கப்பட்டுள்ள பிக்-பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில், மெரினா-ரோகித் என்ற தம்பதிகள் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் போர்வைக்குள் சென்று, முத்தம் கொடுத்துக் கொள்ளும் வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளும் பார்க்கும் நிகழ்ச்சியாக இது இருப்பதால், போட்டியாளர்களுக்கு சமூக அக்கறை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளித்து வருகின்றனர்.