சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 35 பயணிகளை விட்டு சென்ற அபுதாபி செல்லும் ஏர் அரேபியா விமானம். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்த அபுதாபி செல்லும் ஏர் அரேபியா விமானம் பயணிகளுக்கு எந்த அறிவிப்பு இல்லாமல் விட்டு சென்றதாக 35 பயணிகளும், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்குள் அமர்ந்து, உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதோடு, அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சென்னை விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், பயணிகளை சமாதானம் செய்தன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.