கடந்த ஒரு சில மாதங்களாக சமூக வலைதள காதலால் பல்வேறு அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறி வருகிறது.இந்நிலையில் அதைப்போலவே ஒரு சம்பவமானது நிகழ்ந்துளளது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சு (வயது 34) என்ற பெண், திருமணமாகி ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் வசிக்கிறார். இவரும், பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா (வயது 29) என்ற வாலிபரும் முகநூல் மூலம் நண்பர்களாகினர்.நாளடைவில்,இவர்களின் நட்பானது காதலாக மாறியது.
அதன்படி , நஸ்ருல்லாவை காண, குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் அஞ்சு முறைப்படி விசா பெற்று பாகிஸ்தான் சென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.அங்கு அந்த நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். அஞ்சுவும், அவரை விசாரித்த பாகிஸ்தான் போலீஸ் அதிகாரியும், அவர் நஸ்ருல்லாவை காதலிப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அஞ்சுவை மணக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அவரின் ஒரு மாத கால விசா முடிந்தபின் ஆகஸ்டு 20-ந்தேதி இந்தியா திரும்பிவிடுவார் என்றும் நஸ்ருல்லா கூறியுள்ளார். அஞ்சுவை எதிர்பார்த்து ராஜஸ்தானில் அவரது கணவர் அரவிந்த்குமார் தங்கள் 15 வயது மகள், 6 வயது மகனுடன் காத்திருக்கிறார்.