தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவரது மகன் சஞ்சய், சினிமா தொடர்பான படிப்பை வெளிநாட்டில் படித்துவருகிறார்.
இந்நிலையில், சஞ்சயின் பிறந்த நாளான இன்று பல்வேறு பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து கூறிவருகின்றனர். இதையடுத்து இசைப்புயல் AR ரஹ்மானின் மகன் அமீனும் சஞ்சய்க்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.
அதாவது, சஞ்சயுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, Happy birthday Sanjay…God bless you… என்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த பதிவை சினிமா ரசிகர்கள் ஷேர் செய்வதோடு அமீன் ரஹ்மான் மற்றும் சஞ்சய் விஜயின் நட்பு தொடர வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.