நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான்
திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை அதிமுகவினர் செய்த ஊழல்பட்டியல்களை ஏன் வெளியிடவில்லை? அதிமுகவினர்கள் புனிதர்களா? கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றியும் வாய் திறக்கவில்லை?
உடல் ஆரோக்கியத்திற்காக அண்ணாமலை நடை பயணம் செல்கிறார். இதனால் தண்ணீரில் தான் தாமரை மலரும். தமிழகத்தில் தாமரை மலராது.
பாஜக 10 ஆண்டுகள் ஆட்சி செய்து தமிழகத்திற்கு என்ன செய்தது? அடுத்த பிரதமராக மோடி வந்தால் இந்தியாவை அழித்து விடுவார். பிறகு அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும் என்று சீமான் பேசினார்.