லடாக்கில் தொடங்கிய மகளிர் காவல்நிலையம்!

லடாக் என்றால் அனைவருக்கும் நினைவருக்கு வருவது பயணமும் , மலைபிரேதசங்களும் தான். இதில் சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் யூனியன் பிரதேசத்தில் லே-வுக்கு அடுத்தபடியாக உள்ள மிகப் பெரிய நகரம் கார்கில். கார்கில் மாவட்டத்தில் மகளிர் காவல் நிலையம் இதுவரை இல்லாமல் இருந்தது. கார்கில் போர் வெற்றி தினத்தின் 24-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கார்கில் பகுதியில் முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தை ஏடிஜிபி சிங் ஜாம்வல் தொடங்கி வைத்தார்.

அதன்பின் அவர் அளித்த பேட்டியில், ‘‘பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது முக்கியமான நடவடிக்கை. இந்த காவல் நிலையம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும். 24 மணி நேரமும் செயல்படும். இந்த காவல் நிலையம் பெண்களுக்கு தேவையான உதவியையும், ஆதரவையும் அளிக்கும். மேலும், சவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் பெண்களுக்கு இது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்கும் மையமாகவும் செயல்படும்’’ என்றார்.

RELATED ARTICLES

Recent News