விவசாயிகளுக்கு அரசு தோளோடு, தோளாக நிற்கிறது: பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ராஜஸ்தானில் நடந்த விழாவில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து பேசினார்.

பிரதமர் மோடி பேசியதாவது: விவசாயிகளின் கடின உழைப்பால், அவர்களின் சக்தியால் மண்ணில் இருந்து நாம் தங்கத்திற்கு இணையான பயன் பெறுகிறோம்.

இதன் காரணமாகத்தான் விவசாயிகளுடன் நமது அரசு தோளோடு, தோளாக நிற்கிறது. பல ஆண்டுகளாக விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.

எனது தலைமையிலான அரசு விவசாயிகளின் வலியையும், கவலையையும் உணர்ந்துள்ளது. இதனால் தான் கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகள் பலன் பெறும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். விவசாயிகளுக்கென 1.25 லட்சம் வளர்ச்சி மையங்கள் உருவாக்கியுள்ளோம்.

இந்தியாவில் விவசாயிகள் நலன் பெறும் வகையில பிரதமர் கிசான் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகள் பலர் பயன் பெறுகின்றனர். உலகிலேயே குறைவான விலையில் யூரியா உரம் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. 300 ரூபாயில் யூரியா உரம் வாங்க முடிகிறது. பிற நாடுகளில் இது சாத்தியம் இல்லை.

RELATED ARTICLES

Recent News